சிபிஐ அதிகாரிகள் நிச்சயம் பிடிப்பார்கள் என நம்புகிறேன்- பாத்திமா தந்தை பேட்டி
- சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ.
- என் மகள் தற்கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை சிபிஐ அதிகாரிகள் நிச்சயம் பிடிப்பார்கள் என நம்புகிறேன் என்று தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்த பாத்திமா லத்தீப் 21. இவர் சென்னை ஐ.ஐ.டி முதுநிலை பட்டப் படிப்பு படித்து வந்தார்.இவர் தங்கி இருந்த விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இதற்கு இடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் வழக்கு தொடரப்பட்டது .
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.பின்னர் பாத்திமாவின் தந்தை ,பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து தமிழக அரசு பாத்திமாவின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது.பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ. இயற்கைக்கு மாறான மரணம் (174) என்ற பிரிவில் சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதனால் சென்னை சிபிஐ அலுவலகத்தில் பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஆஜரானார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், என் மகள் தற்கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை சிபிஐ அதிகாரிகள் நிச்சயம் பிடிப்பார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.