பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவு .!
- சென்னை உயர்நீதிமன்றத்தில் பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.
- தற்போது பாத்திமாவின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்த பாத்திமா லத்தீப் 21. இவர் சென்னை ஐ.ஐ.டி முதுநிலை பட்டப் படிப்பு படித்து வந்தார். இதை தொடர்ந்து கடந்த மாதம் 9-ம் தேதி அவர் தங்கி இருந்த விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பாத்திமாவின் தந்தையும், தனது மகள் மரணத்தில் நீதி கேட்டும் , சென்னை உயர்நீதிமன்றத்தில் பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் வழக்கு தொடரப்பட்டது .
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.இந்நிலையில் பாத்திமாவின் தந்தை ,பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் பாத்திமாவின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.