ஜெயஸ்ரீ கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்கக்கோரி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமதி என்பவர் மனுதாக்கல் செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த அதிமுக நிர்வாகி முருகன் மற்றும் அதிமுக கிளை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தெ ஜெயஸ்ரீயை கட்டிப்போட்டுபெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சிறுமி ஜெயஸ்ரீ கொடுத்த மரண வாக்குமூலம் போலீஸார் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எனவே தமிழக போலீஸார் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமதி என்பவர் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில், காவல்துறை விசாரணை திருப்திகரமாக இருப்பதாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக மனுதாரர் சுமதி விளக்கம் கொடுத்ததால், மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதித்தது. இதைதொடர்ந்து, சுமதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக…
பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…