நீட் தேர்வு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். பின்னர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள்.இந்த விசாரணைக்கு பின்னர் சிபிசிஐடியினர் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்கள்.இதுவரை 12 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியுள்ளது.
தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.இதில் 2 பெண்களும் அடங்குவார்கள்.இதில் உள்ளவர்களின் பெயர் ,வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல் தெரிந்தால் உடனடியாக சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 9443884395 என்ற செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…
லக்னோ : இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…