தந்தை-மகன் கொலை வழக்கு.. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை!

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்வதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உட்பட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணமாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரண்ட்ஸ் அப் போலீசையும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த கொலை நடந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தவுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.