தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு.. காவலர் மஹாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில், காவலர் மஹாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவலர் மகாராஜன், மாஜிஸ்திரேட் பாரதிதாசனை அவதூறாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.