பாலியல் தொல்லை புகாரில் கெபிராஜை 2 நாள்களில் காவலில் சிபிசிஐடி போலீசார் எடுத்தனர்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இதற்கிடையில், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்தன.
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தான்கல்லூரி மாணவியாக இருக்கும் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டே கெபிராஜ் தனியார் பள்ளியில் ஜூடோ பயிற்சியை பயின்று வந்ததாகவும் அப்போது போட்டி ஒன்றுக்கு காரில் செல்லும்போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கெபிராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர், கெபிராஜை ஜூன் 14-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தனர். சமீபத்தில் கெபிராஜ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், கெபிராஜை 2 நாள்கள் விசாரணை செய்ய சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. வீராங்கனைகளிடமும் விசாரணை நடத்த சிபிஐ போலீசார் திட்டமிட்டுள்ளனர். வேறு மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளாரா..? என சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…