கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவர் குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.
ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் சீனுவாசன், ராஜசேகர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது நபராக சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 எழுத்துத் தேர்வில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நடத்திய அதிரடி விசாரணையில் முறைகேடுகள் நடந்தது உறுதியானது.
இந்த முறைகேட்டில் 99 தேர்வர்கள் ஈடுபட்டது தெரியவர டி.என்.பி.எஸ்.சி அவர்கள் அனைவரும் வாழ்நாள் தேர்வு எழுதுவதற்கு தடைவிதித்தது.இந்நிலையில் டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், சார்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மூன்று தனிப்படை அமைத்து வழக்குப்பதிவு செய்து குரூப் 4 முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றுவரை இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் , முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் என 12 பேரைசி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…