வேங்கைவயல் விவகாரம் – 4 சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதிக்கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு..!
வேங்கைவயல் விவகாரத்தில், 4 சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதிக்கோரி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் கண்டிப்பாக சோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச்சட்ட நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் இன்று 8 பேரின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.
இத்தனை தொடர்ந்து, புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இதுவரை 21 நபர்களின் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் ; மேலும் 4 சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதிக்கோரி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்துள்ளது.