அதிமுக கலவர வழக்கு தொடர்பாக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இன்று நேரில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், அதிமுக அலுவலகம் மற்றும் வளாகத்தில் இருந்த பொது சொத்துக்கள் சேதமடைந்தன.
இது தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்முகம் கொடுத்த புகார், ஓபிஎஸ் தரப்பு புகார் உட்பட 4 புகார்கள் பதியப்பட்டன. இந்த வழக்கானது, போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீசார், ஏற்கனவே அதிமுக அலுவலகத்தில் விசாரணை தொடங்கி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் குளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று கொண்டனர்.
தற்போது அடுத்தகட்டமாக, இந்த கலவர வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் பெற்ற ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதவலர்கள் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் வர வேண்டாம் என இபிஎஸ் தரப்பு, காலை 10 முதல் 12 மணி வரையிலும், ஓபிஎஸ் தரப்பு மதியம் 2 மணி முதல் 4 மணி வரையில் ஓபிஎஸ் தரப்பு சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளனர்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…