அதிமுக கலவர வழக்கு : முன்ஜாமீன் பெற்ற ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் நேரில் ஆஜர்.!

Default Image

அதிமுக கலவர வழக்கு தொடர்பாக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இன்று நேரில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளனர்.  

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், அதிமுக அலுவலகம் மற்றும் வளாகத்தில் இருந்த பொது சொத்துக்கள் சேதமடைந்தன.

இது தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்முகம் கொடுத்த புகார், ஓபிஎஸ் தரப்பு புகார் உட்பட 4 புகார்கள் பதியப்பட்டன. இந்த வழக்கானது, போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீசார், ஏற்கனவே அதிமுக அலுவலகத்தில் விசாரணை தொடங்கி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் குளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று கொண்டனர்.

தற்போது அடுத்தகட்டமாக, இந்த கலவர வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் பெற்ற ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதவலர்கள் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் வர வேண்டாம் என இபிஎஸ் தரப்பு, காலை 10 முதல் 12  மணி வரையிலும், ஓபிஎஸ் தரப்பு மதியம் 2 மணி முதல் 4 மணி வரையில் ஓபிஎஸ் தரப்பு சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்