#BREAKING: சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரிக்க முடிவு…!
சிவசங்கர் பாபா மீதான பாலியல் தொல்லை வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரிக்க முடிவு செய்துள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைதான நிலையில், அவரது பள்ளி ஆசிரியர்களை அழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்ப உள்ளனர். சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு உள்ள நிலையில் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.
புகார் கொடுத்துள்ள மாணவிகள் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் சிவசங்கர் பாபாவிடம் தங்களை அழைத்து சென்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனால், யார் அந்த ஆசிரியர் என்பது தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.