காவிரி மேலாண்மை விவகாரத்தில் எம்.பி.க்கள் ராஜினாமாவால் தீர்வு கிடைக்காது!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதங்களை வலுவாக எடுத்து வைத்ததாகவும், எம்.பி.க்கள் ராஜினாமாவால் தீர்வு கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சரிடம், மு.க.ஸ்டாலின், கமல் உள்ளிட்டோர் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அவையே முடங்கும் வகையில் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகக் கூறினார்.
எம்.பி.க்கள் இருக்கும்போதே தொடர் போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்காத நிலையில் எம்பிக்களை ராஜினாமா செய்ய வைத்து இருக்கும் அதிகாரத்தையும் இழந்துவிட முடியாது என விளக்கம் அளித்தார்.
ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளை ராகுல் மன்னித்துவிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் சட்டத்தில் வழிவகை இருந்தால் அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்யும் என குறிப்பிட்டார்.
முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை விமான நிலைய வளாகத்தில் அதிமுக சார்பில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.