ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு
உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வேதா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதைத்தொடர்ந்து, வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் அலையை திறக்க திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .மேலும் வழக்கினை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில் ,ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மேல்முறையீடு செய்தால், தங்களது கருத்தை கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.