அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!
அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், கேவியட் மனு தாக்கல்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கட்சி சார்பில் புதிதாய் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக தலைமை நிலை செயலகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடிபழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருந்த நிலையில், நாளை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நாளை வரவுள்ள நிலையில், புதிய கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பாகவும் புதிய கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.