முக்கியச் செய்திகள்

காவிரி நதிநீர் விவகாரம்: அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! சீமான் அறிவிப்பு.!

Published by
செந்தில்குமார்

காவிரி நதி நீர் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதன்படி, காவிரியில் இருந்து உரிய அளவிலான தண்ணீரை திறக்க வேண்டும் என தமிழக அரசு காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டு வலியுறுத்தி வருகிறது.

ஆனால் கர்நாடக அரசு தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என தெரிவித்து வருகிறது. அந்த வகையில், காவிரி ஒழுங்காற்று மையம் மற்றும் மேலாண்மை வாரியம், 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. பின் காவிரி மேலாண்மை வாரியத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நாள்தோறும் 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதே போல, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது என்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம், மனித சங்கிலி  உள்ளிட்ட பல்வேறு போராட்டங்ளை விவசாயிகள் முன்னெடுத்துள்ளன.இந்த நிலையில், காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடததப்படவுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தமிழர் விரோதப்போக்கைக் கண்டித்தும்,

தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் வருகின்ற 30-09-2023 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பேரறிவிப்பு செய்துள்ளார்.”

“எனவே, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு களப்பணியாற்றி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இம்மாபெரும் போராட்டத்தினை பேரெழுச்சியாக முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

யமுனை ஆற்றை நீர்நிலையாக பார்க்காமல் உயிராக பார்க்க வேண்டும் – ராகுல் காந்தி!

டெல்லி : இந்தியாவின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாக இருக்கும் ஆறு யமுனை.எனினும், இது மிகவும் மாசுபட்ட ஆற்றாக மாறிவிட்டது,…

10 minutes ago

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள பிரச்சனைகள்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு…

39 minutes ago

INDvENG : தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் இந்தியா!

மகாராஷ்டிரா : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே மூன்று போட்டிகள் நடந்து…

1 hour ago

இன்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று…

2 hours ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை! போக்குவரத்து மாற்றங்கள்!

சென்னை:  இன்று (ஜனவரி 31, 2025) துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

2 hours ago

வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

வேலூர் : கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வேலூர் காட்பாடி பகுதியில் பெண் மருத்துவர் தனது ஆண் நம்பருடன்…

12 hours ago