கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட உத்தரவு
டெல்லி காவிரி மேலாண்மை ஆணை கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது.மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதன் பின் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசென் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.அதில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்குரிய 9.2 டி.எம்.சி. காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.