காவிரியில் இருந்து நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலம் இடையே பிரச்சனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி தேவையான அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அரசும், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என கர்நாடக அரசும் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரமானது காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதே நேரத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்து வருகிறது. காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதே போல தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனிடையே, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது. தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடக அரசு முறையிட்டது. இதனை தொடர்ந்து 88வது காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் வரும் அக்டோபர் 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரியில் இருந்து நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியகத்தின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் அறிவித்துள்ளார். கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்து கடையடைப்பு போராட்டம் என்றும் மத்திய அரசின் அலுவலங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…