இன்று சட்டப்பேரவையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கடந்த ஜூன் நிலவரப்படி மேட்டூர் அணையில் 69.7 டிஎம்சி தண்ணீர் இருக்கும் போதே குருவை சாகுபடி பாசனத்திற்கு தண்ணீர் திறந்தோம். அதனால் நீர் கடைமடை வரை சென்றது. ஆனால் குருவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாக இருந்த சமயத்தில் செயற்கையான நீர் நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது என குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு மேற்கொன்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதில், கடந்த ஜூன் மாதம் பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு 9.19 TMC தண்ணீர் திறக்க வேண்டும் என்ற நிலையில் 2.2 TMC தண்ணீர் அளவை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட்டது. இது தொடர்பாக கடந்த 3.7.2023 அன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஜூன், ஜூலையில் தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீர் அளவை திறக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
காவிரி விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.!
அதன் பிறகு, மீண்டும் 5.7.2023 அன்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து வலியுறுத்தினார். தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தண்ணீர் திறக்க முடியாது என கார்நாடக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த 19.07.2023 அன்றும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினார். இதன் பின்பும், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் இருந்து வருகிறது.
கர்நாடகாவில் உள்ள 5 அணைகளில் 30 ஆண்டுகள் சராசரியில் 84 சதவீத தண்ணீர் இருக்கிறது. ஆனால் பிலிகுண்டுலுவில் 13 சதவீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் கடந்த ஜூலை 25ஆம் தேதி கபினி அணையில் இருந்து அடுத்த 6 நாட்களுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று மையம் உத்தரவிட்டது. அதனை அடுத்து ஜூலை 31இல் நடைபெற்ற காவிரி ஒழுங்கற்று மையத்திடம், ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்திற்கு அடுத்த 7 நாட்களுக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
ஆகஸ்ட் 4ஆம் தேதி காவிரி விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு நான் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) கடிதம் மூலம் வலியுறுத்தினேன். ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ஆகஸ்ட் 11 முதல் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 11 அந்த உத்தரவானது 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு உறுப்பினர்கள் காவிரி ஒழுங்காற்று மைய கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் தமிழகத்திற்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் எனவும் 24.8 TMC தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தமிழக அரசு மனு ஒன்று தாக்கல் செய்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 15ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. அதன் பிறகு திமுக எம்பிக்கள் மொத்தமாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.
கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி திறந்து விட வேண்டும் என்று காவேரி மேலாண்மை வாரியம் கூறியது. ஆனால் அதனை விட குறைவான அளவு தண்ணீரை தான் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட்டது.
அடுத்து 11.10.2023 அன்று நாளை மறுநாள் மீண்டும் காவிரி ஒழுங்காற்று கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்து சட்ட ஆலோசகர்களை சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். 1.6.2023 முதல் 3.10.2023 வரையில் 46.1 TMC தண்ணீர் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 லட்சம் ஏக்கர் அளவில் குருவை சாகுபடி நடைபெற்றுள்ளது. எஞ்சிய பயிர்களை காப்பாற்ற இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற கேட்டுக்கொள்கிறேன் என காவிரி நதிநீர் பங்கீடு தனித்தீர்மானம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…