தமிழகத்திற்கு 3000 கனஅடி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு.!
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தற்போது விஸ்வருபம் எடுத்து வருகிறது. இரு மாநிலங்களிலும் விவசாய அமைப்புகள் , மற்ற மாநில அமைப்புகள் போராடி வருகின்றன. தண்ணீர் வேண்டும் என தமிழக அமைப்புகளும், தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று கன்னட அமைப்புகளும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர் .
முன்னதாக காவிரி ஒழுங்காற்று மையம் தமிழக்த்திற்க்கு வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நடந்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் காவிரி ஒழுங்கற்று பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என உத்ராவிடப்பட்டது .
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து வினாடிக்கு 5000 கனஅடி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இன்று தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கூடாது என கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தான் இன்று டெல்லியில் காவேரி மேலாண்மை வாரியம் அவசர ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தது. இதில் தமிழகம் சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு வினாடிக்கு 12500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அதிகாரிகள் தமிழக்த்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியதால் இரு மாநில அதிகாரிகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
இறுதியில், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து, காவிரி ஒழுங்காற்று மையம் பரிந்துரை செய்ததை குறிப்பிட்டு, வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீரை வரும் அக்டோபர் 15 வரையில் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.