காவிரி மேலாண்மை வாரியம் – முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடிய வழக்கில் இருந்து முதலமைச்சர் உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்களை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தியாக முக ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குகளை திரும்பப் பெறுவதாக காவல்துறை கூறிய நிலையில், வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.