தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட மறுத்து வரும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வேல்முருகன் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கையில், காவிரி ஆணையம் கூறிய மிகமிகச் சிறிதளவு தண்ணீரான நொடிக்கு 5000 கனஅடி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் பரவலாக கன்னட அமைப்புகளும், உழவர் சங்கங்களும் பல வகையான போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
குறிப்பாக, காவிரி விவகாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய முப்பெரும் எதிர்க்கட்சிகளும் ஒற்றைப் புள்ளியில் நின்று, தமிழ்நாட்டுக்கு எதிராக போராடி வருகின்றனர். பெங்களூரில் உள்ள தமிழர்கள் வெளியேற வேண்டும் என்றும் அவர்களை மு.க.ஸ்டாலின் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வாட்டாள் நாகராசு ஆவேசமாக கூறியுள்ளார். அதோடு, பெங்களூரில் உள்ள தமிழர்கள் தண்ணீர் குடிக்கக் கூடாது, அது கன்னடர்களின் தண்ணீர் என்றும் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன் வைத்தும், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதித்ததை கண்டித்தும், இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் பேரணியை முன்னெடுப்பதோடு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமையை காக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் இந்த அறப்போராட்டத்தில், ஜனநாயக கட்சிகளும், அமைப்புகளும், விவசாய சங்கங்களும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட மறுத்து வரும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி நதிநீர் உரிமையை மீட்கும் வகையில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழர்களுக்கு விரோதம் செய்யும் கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு ஆதரவு வழங்குகிறது. அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவமதிப்பு செய்கின்றனர். கர்நாடக மண்ணில் தமிழர்களுக்கு சிறு கீறல் ஏற்பட்டாலும், அதை நாங்கள் விடமாட்டோம் என்றுள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…