காவிரி விவகாரம் : கர்நாடகாவுக்கு லாரிகள் இயக்க வேண்டாம்.! லாரி உரிமையாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை.! 

Tamilnadu Lorry Sangam

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரமானது கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தங்களுக்கு தரவேண்டிய தண்ணீரை தரவில்லை என்று தமிழக தரப்பும், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை, குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என்ற வாதத்தை கர்நாடக அரசும் முன்வைத்து வருகின்றன.

இந்த விவகாரம் காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் தாண்டி உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றமானது காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை பின்பற்ற கர்நாடகா அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் நாளை கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மாநில முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக லாரிகள் உரிமையாளர் சங்கம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதாவது, நாளை கர்நாடக செல்லும் எந்த லாரிகளும் தற்போது அங்கு செல்ல வேண்டாம் என்றும்,  கர்நாகா  வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளும் ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டுமென்றும் லாரிகள் உரிமையாளர்  சம்மேளன தலைவர் தனராஜ் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட லாரிகள் தாக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதன் காரணமாக நாளைய தினம் கர்நாடகவுக்கு எந்த லாரிகளும் இயக்கப்படாது எனவும், தமிழகம் கர்நாடகம் மாநில எல்லையில் இந்த லாரிகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு லாரிகள் சங்க சம்மேளன தலைவர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்