Cauvery Issue : காவிரி ஒழுங்காற்று மையம் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறதா.? அமைச்சர் துரைமுருகன் சந்தேகம்.!

Minister Duraimurugan - Cauvery River

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் இருந்து கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் தர தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இதனால் நமக்கான தண்ணீரை பெற தமிழக அரசும் பல்வேறு வகைகளில் போராடி வருகிறது. இருந்தும் இந்த தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து காலையில் டெல்லியில் பேசுகையில், காவேரி விவகாரத்தில் நாங்க தமிழகம் சார்பாக 10 பேர், அவங்க கர்நாடக சார்பாக 10 பேர் சேர்ந்து பேசுகிறோம். அவங்க காவிரியில் தண்ணீர் இல்லைனு சொல்றாங்க. நாங்கள் காவிரியில் தண்ணீர் இருக்குனு சொல்கிறோம்.

காவேரி மேலாண்மை வாரியம் கடந்த 13.09 .2023 அன்று 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கூறினார்கள். ஆனால் இப்போதைக்கு 5 ஆயிரம் தண்ணீர் தான் திறந்து விடுகிறார்கள். இது தொடர்பாக காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் இதனை தான் கேட்டேன். நாளைக்கு உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. எங்களது ஒரே நம்பிக்கை தற்போது உச்சநீதிமன்றம் தான். ஆஃப் த ரெக்கார்டு நீங்க எந்த பக்கம் சார் இருக்கீங்க? என்று விளையாட்டாக கேட்டுவிட்டு கூட வந்தேன் என பேட்டியளித்தார் அமைச்சர் துரைமுருகன்..

இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காவிரியில் நீர் இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்கும் அதிகாரம் காவேரி ஒழுங்காற்று மையத்திற்கு உள்ளது. அவர்கள் தான் பார்த்து கூற வேண்டும்.

கடந்த 13ஆம் தேதி காவேரி ஒழுங்கற்று மையம் தமிழகத்திற்கு வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்கலாம் என கூறுகிறார்கள். அப்படி சொன்ன அவர்களே அடுத்து வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காவிரி ஒழுங்காற்று மையம் கர்நாடகாவுக்கு சாதகமாக இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.

இது தொடர்பாக நாம் மத்திய அமைச்சரிடம் கேட்டு விட்டோம். காவேரி ஒழுங்கற்று மையத்தில் இருக்கும் உறுப்பினர் ஒருவரே கர்நாடகாவுக்கு குடிக்க தண்ணீர் தேவைப்படுகிறது என்று கூறுகிறார்கள். நாங்க மட்டும் என்ன கீழே கொட்டுவதற்கா தண்ணீர் கேட்க கேட்கிறோம்.? தமிழ்நாட்டின் கோரிக்கையை எந்த காலத்திலும் கர்நாடக அரசு ஏற்றதில்லை. நாம் பெற்ற உரிமை முழுக்க உச்சநீதிமன்றத்தில் பெற்றதுதான். அதே போல வரும் காலத்திலும் பெறுவோம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024
Allu Arjun in chennai
Tamilnadu CM MK Stalin - PMK Leader Dr Ramadoss
AUS vs IND - Aussies Struggling