காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் , உச்சநீதிமன்றம், மத்திய அரசு என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
முன்னதாக காவிரி ஒழுங்காற்று மையம் பரிந்துரை செய்த 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவில் நேற்று சுமார் 1500க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர்.
அதே போல தமிழகத்திலும், பல்வேறு பகுதிகளில் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை எதிர்த்தும், அதற்கு துணை போவதாக மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் அவரது கட்சி தொண்டர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர்.
சென்னை , சின்னமலை ராஜீவகாந்தி சிலை அருகே போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேரடியாக ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரப்பரப்பு நிலவியது. இதனை அடுத்து, பேரணியாக செல்ல முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர்.
போராட்டத்தின் போது கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில், காவிரியில் இருந்து அவர்களே (கர்நாடக அரசு) நீர் தர மறுத்து அவர்களே போராட்டம், கடையடைப்பு நடத்துகிறார்கள். அனைத்து அணைகளையும் மத்திய அரசு ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இந்த காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அதனால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறோம். கர்நாடகாவில் தமிழர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், அதற்கு தகுந்த எதிர்வினை ஆற்றப்படும் என்றும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…