தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார். காவிரி விவகாரம் மாநிலத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தி வருகிறது.
மறுபக்கம் காவிரி மெளனமாய் ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டும், போதிய நீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க இயலாது என தொடர்ந்த மறுத்து வருகிறது. தமிழகத்துக்கு அவ்வப்போது காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டாலும், போதிய நீர் வழங்கவில்லை என குற்றச்சாட்டப்படுகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என இரு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
அதேபோல், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள், அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார். இதுதொடர்பான அறிக்கையில், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம்தாழ்த்தி வரும் பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற திமுக அரசைக் கண்டித்தும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு சீமான் தெரிவித்துள்ளார். எனவே, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு களப்பணியாற்றி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இம்மாபெரும் போராட்டத்தினை பேரெழுச்சியாக நடத்த வேண்டும். தண்ணீர் தர மறுப்பது கர்நாடகத்தின் சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும். தமிழக முதல்வருக்கு இறுதிச்சடங்குகள் செய்து அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…