காவிரி விவகாரம் : அனைத்துக் கட்சி கூட்டத்தில் இறுதி நேரத்தில் முக்கிய மாற்றம்.!

Minister Durai murugan - Tamilnadu CM MK Stalin

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. முன்னதாக காவிரி ஒழுங்காற்று வாரியம் பரிந்துரை (உத்தரவு) செய்து இருந்த இம்மாதம் (ஜூலை) ஒரு நாளைக்கு 1 டிஎம்சி அளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்பதை கூட  கர்நாடக அரசு ஏற்க மறுத்துவிட்டது.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 16) தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த ஆலோசனை கூட்டம் தற்போது தலைமை செயலலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார், அமைச்சர் துரைமுருகன் தலைமை ஏற்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் , அனைத்து கட்சி கூட்டத்திற்கு வருகை புரிந்து அதற்கு தலைமை ஏற்றுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து அடுத்தகட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விசிக சார்பில் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, மமக சார்பில் ஜவாஹிருல்லா, தவாக சார்பில் வேல்முருகன், கொமதேக சார்பில் ஈஸ்வரன், பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், பாஜக சார்பில் கரு.நாகராஜன், முருகானந்தம் மற்றும் சட்ட வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்