காவிரி மேலாண்மை விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட கோரிக்கை!

Published by
Venu

மு.க.ஸ்டாலின் , காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென முதலமைச்சரை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, தொலைபேசி மூலம் தங்களிடம் பேசியபோதும், நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க மறுத்துள்ள பிரதமர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தியுங்கள் என்று கூறியதாக, தாங்கள் தம்மிடம் தெரிவித்த நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பும் மூடப்பட்டுவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் என்றாகி, இன்றைக்கு நீர்வளத்துறைச் செயலாளரை மட்டுமே சந்திக்க முடியும் என்ற நிலையில், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த உணர்வை மத்திய அரசு அவமதித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை உச்ச நீதிமன்றத்  தீர்ப்பில் இல்லை என்ற மத்திய நீர்வளத் துறைச் செயலாளரின் பிழையான வாதத்தை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எதிர்த்தாரா, விளக்கம் அளித்தாரா என்பது தெளிவாகவில்லை என்றும், முதலமைச்சரான தாங்களும் இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை தாமதமின்றி நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்,  பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பே, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முதலமைச்சரை, மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

17 minutes ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

23 minutes ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

43 minutes ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

1 hour ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

2 hours ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

3 hours ago