தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.! காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை.!
சென்னை: தமிழகத்திற்கு மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுக்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கான உரிய அளவிலான காவிரி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மை வாரியத்திற்கு உரிய பரிந்துரைகளை காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்து உரிய பரிந்துரைகளை காவிரி ஒழுங்காற்று குழு , காவிரி மேலாண்மை வாரியத்திற்கு அளிக்கும்.
அவ்வாறு இன்று 96வது காவிரி ஒழுங்கற்று குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 3.8 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டுள்ளது என்றும் மீதம் 6.2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது என்றும், ஜூன் மாதம் கர்நாடகா அரசு 9.17 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் அதனையும் கால தாமதம் இன்றி திறக்க கோரி தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
பின்னர், கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, இறுதியாக, காவிரியில் மே மாத இருப்புப்படி, 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் காவிரி ஒழுங்கற்று குழு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
வரும் 21ஆம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டத்தில் இந்த பரிந்துரை எடுத்துக்கொள்ளப்பட்டு. பின்னர் மீண்டும் மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதியாக எத்தனை டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும்.