தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் மறுப்பதால், சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில், தமிழகத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்து, கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக கடந்த மாதம் 22ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வரும் 7ம் தேதி கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஒருவாரம் ஆன நிலையிலும், பிரதமர் தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்க மறுப்பதாக கூறினார். பிரதமரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக கூறிய ஸ்டாலின், கர்நாடக தேர்தலை மையமாக வைத்து பிரதமர் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்று தெரிவித்த அமைச்சரை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று தெரிவிதார்.
முதல்வர் தலைமையிலான அனைத்துக்கட்சி குழுவை சந்திக்க பிரதமர் மறுப்பது தமிழகத்துக்கு அவமானம் என்றும் மத்திய அரசின் பாராமுக நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். அப்போது, வரும் திங்கள் கிழமை வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என முதல்வர் கூறியதாக குறிப்பிட்ட ஸ்டாலின், அதுவரை மத்திய அரசிடம் இருந்து நடவடிக்கை இல்லாத பட்சத்தில் வரும் 8ம் தேதி பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற உறுதியளித்ததாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…