Kaveri River [File Image]
கர்நாடகாவில் இருந்து உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள அளவில் காவேரி நீரை தமிழகத்திற்கு திறக்க சொல்லி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தமிழக அரசு, காவேரி ஒழுங்காற்று வாரியம் , காவேரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம், மத்திய அரசு என பல்வேறு வகையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே அந்தந்த மாத கணக்கீட்டின் படி திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் அளவை விட குறைவான அளவிலேயே தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து வருகிறது. இதனை குறிப்பிட்டு தமிழக அரசு, தமிழகத்திற்கு தேவையான குறைந்தபட்ச அளவிலான தண்ணீரையாவது திறந்துவிட கோரி வலியுறுத்தி வருகிறது.
இன்று டெல்லில் காவேரி ஒழுங்கற்று மையம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் தமிழக விவசாயத்திற்கு தேவையான குறைந்தபட்ச அளவிலான தண்ணீரை திறக்க வலியுறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி குறைந்தபட்ச அளவிலான தாண்ணீர் தான் திறக்கப்படுகிறது என இந்த கூட்டத்தில் குறிப்பிடபட்டது.
இதனை அடுத்து, கர்நாடக அரசனது, காவேரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என காவேரி ஒழுங்கற்று வாரியம் பரிந்துரை செய்துள்ளது . இந்த பரிந்துரையை கர்நாடக அரசு ஏற்காவிடில் தமிழக அரசு அடுத்தகட்டமாக காவிரி மேலாண்மை வாரியத்தில் முறையிடும் . காவேரி ஒழுங்காற்று மையமானது பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். உத்தரவுகளை வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…