சாதி கெட்ட வார்த்தை இல்லை.! அது ஒரு அழகிய சொல்.! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.!
சாதி என்பது கெட்ட வார்த்தை இல்லை. அதில் நிறைய பண்பாட்டு பழக்க வழக்கங்கள் உள்ளன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாமக கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜாதி, மதம் , பழக்கவழக்கங்கள் பற்றி பேசினார்.எ அப்போது அவர் கூறுகையில், சாதி என்று சொன்னாலே எதோ கெட்ட வாரத்தை போல நினைக்கிறார்கள். அது கெட்ட வரத்தை இல்லை. ஜாதி என்பது ஒரு அழகிய சொல் என கூறினார்.
மேலும், சாதியில், பல்வேறு பண்பாட்டு பழக்க வழக்கங்கள், வழிபாடுகள் உள்ளன. இது நமது பெருமை. அதே சமயம் சாதியில் உள்ள அடக்குமுறைகளை நாம் ஒழிக்க வேண்டும். சாதியில் உள்ள பழக்கவழக்கங்ள், மதத்தில் உள்ள பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். இதனை பெருமையாக பார்க்க வேண்டும். அமெரிக்காவில் அமெரிக்காவுக்கு என்று ஒரு பண்பாடு கிடையாது. அமெரிக்கர்கள் வெளிநாட்டில் இருந்து அங்கு குடியேறிவர்கள். அதனால் அங்கு ஒரு கலாச்சாரம் என்று ஒன்று கிடையாது. இங்குள்ள சாதிய திருமணம் நமது பண்பாடு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.