சென்னை : அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வி.கே.சசிகலா, “அதிமுகவில் ஜாதி பார்க்கப்படுவதாக முதன்முதலாக கேள்விப்படுகிறேன்.
அதிமுகவில் இருந்துகொண்டு அவ்வாறு செய்வதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வந்த பிறகு, அரசியல் குறித்து எம்.ஜி.ஆர். என்னிடம் பேசுவார். இந்தியாவின் 3வது பெரிய இயக்கமான அதிமுக சிலரின் சுயநலத்தால் வீழ்ச்சி யாரையும் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். கவனமாக இருப்பார்.
எம்ஜிஆர் என்னுடன் பல அரசியல் விவகாரங்களை பேசியுள்ளார். அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சிலரது சுயநலத்தால், அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவில் சாதி அரசியல் செய்வதை தொண்டர்கள் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
நானும், ஜெயலலிதாவும் யாரிடமும் சாதி பார்த்து பழகியதில்லை எனக் கூறியுள்ளார். அவ்வாறு நான் சாதி பார்த்து பழகியிருந்தால், எடப்பாடி பழனிசாமியை, தமிழக முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். புரட்சி தலைவருக்கு பின் அம்மாவும் நானும் பல இன்னல்களை சந்தித்து, மிகப்பெரிய இயக்கமாக அதிமுகவை கட்டமைத்தோம்.
ஆனால், இன்று அதிமுக தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. ஒருசில சுயநலவாதிகள் கட்சியை இந்த அளவிற்கு எடுத்துச்சென்றுள்ளனர். தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்க கூடாதுனு நினைக்கிறேன், இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன் என ஆவேசமடைந்த அவர், அதிமுக முடிந்து விட்டது என யாரும் கருத வேண்டாம் என கூறிய அவர், தனது என்ட்ரி ஆரம்பமாகிவிட்டதாக சவால் விடுத்துள்ளார்
தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் அரசியல் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தொண்டர்களை சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்க உழைப்பேன் எனவும் கூறிஉள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…