சாதிய பாகுபாடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடத்தில், ஆசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இச்சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் அவர்கள் பள்ளிகளில் சாதிய பாகுபாடு குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என்றும், சாதிய பாகுபாடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடங்கப்பட்டுள்ள காலை சிற்றுண்டி திட்டமானது விரைவில் மற்ற மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இத்திட்டம் குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…