சாதி சான்றிதழ் – 30 நாளில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
மனுதாரரின் விண்ணப்பித்தை நிராகரித்த வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு.
சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பம் மீது 30 நாளில் நடவடிக்கை எடுக்க என்றும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த வெயில் செல்வி என்பவர் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்த வழக்கில் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காட்டுநாயக்கன் சமூக சாதி சான்றிதழுக்காக ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிப்பை எதிர்த்து உயர்ப்பிநீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
முறையான ஆவணங்கள் இல்லையென தங்களின் விண்ணப்பம் நிராகரிப்பு என மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வெயில் செல்வி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பம் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, மனுதாரரின் விண்ணப்பித்தை நிராகரித்த வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.