முந்திரி தொழிலாளி கொலை வழக்கு : கடலூர் திமுக எம்.பி ரமேஸுக்கு ஜாமீன் – உயர்நீதிமன்றம்
முந்திரி தொழிலாளி கொலை வழக்கு விவகாரத்தில், கடலூர் திமுக எம்.பி ரமேஸுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடலூர் தொகுதி திமுக எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் பகுதியில் உள்ளது. இங்கு வேலை செய்து வந்த தொழிலாளி கோவிந்தராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரமேஷ் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கோவிந்தராசுவின் மகன் செந்தில் வேல் தரப்பில், இந்த சிபிசிஐடி ஒருதலை செயல்படுகிறது.சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, அவரது ஜாமீன் மனுவையும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, திமுக எம்.பி ரமேஷ் தரப்பில், இந்த சம்பவம் நடந்த போது தன்னுடைய பெயர் சேர்க்கப்படவில்லை என்றும், பின்னர் தான் தான் இந்த சம்பவம் தொடர்பாக தான் குற்றவாளி என்று பெயர் சேர்க்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, கடலூர் எம்.பி ரமேசுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும்,விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரும் மனு மீது, நவ.23-ஆம் தேதி உததரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளனர்.