முந்திரி கடத்தல்: முன்னாள் அமைச்சரின் மகன் கைது..!
ரூ.1கோடி மதிப்பிலான முந்திரியை கடத்தியதாக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் கைது செய்யப்பட்டார். 12 டன் முந்திரி கடத்தல் தொடர்பாக ஜெபசிங் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கிறது. முந்திரி கடத்தலில் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன்,மாரிமுத்து, ராஜ்குமார், செந்தில்குமார் மற்றும் பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.