மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்- கே.எஸ்.அழகிரி
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
குழு வன்முறையை தடுத்து நிறுத்தக் கோரி திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள்.இதனால் நாட்டின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக கூறி அவர்கள் அனைவரின் மீதும் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்,திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது .இந்த வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.