வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் நாளை விசாரிக்கப்பட வாய்ப்பு..?

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க வேறு அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் அமர்வு விசாரிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இருந்த நீதிபதி ஆதிகேசவலு விலகியதால் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.