முன்னாள், இன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு… இன்று விசாரணை..!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து செய்தது உள்ளிட்ட வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி , வளர்மதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என கடந்த திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
விரல்ரேகை பதியாதோர் ரேஷன் கார்டு நீக்கமில்லை – தமிழக அரசு விளக்கம்
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி , வளர்மதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள் இன்று அவரின் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேசே விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.