சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்! காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது எஸ்.சி, எஸ்.டி ஆணையம்!

Seeman

சென்னை : நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரையின் போது தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியை ‘சண்டாளன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாடல் பாடி இருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதன் விளைவாகச் சாட்டை துரைமுருகன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக எஸ்சி, எஸ்டி ஆணையம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில், ‘சண்டாளன்’ என்ற சொல் அரசியல் மேடைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதனால், அந்த வார்த்தையை இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளில் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்திருந்தனர். மேலும், சண்டாளன் என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மீது எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குப் பரிந்துரையும் செய்திருந்தது.

இருந்தாலும் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் சாட்டை துரை முருகனைக் கைது செய்யப்பட்டதை விமர்சித்து, ‘நானும் அதே வார்த்தையைச் சொல்கிறேன், முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்’ எனக் கூறி ‘சண்டாளன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி அதே பாடலை மேடையில் சீமான் பாடி இருந்தார். இதற்குச் சீமான் மீது கடும் கண்டனம் மீது எழுந்தது.

மேலும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் எஸ்.பி அலுவலகம் உட்படப் பல இடங்களில் புகார்கள் அளித்தனர். மேற்கொண்டு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வகையில் திமுக நிர்வாகியான அஜேஷ் என்பவர் சீமான் மீது நடவடிக்கை கோரி பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்த கட்டமாக, மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் உதவியை நாடினார்.

இதனைத் தொடர்ந்த ‘சண்டாளன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காகச் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், நாதக ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கையும் எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்