வேல் யாத்திரைக்கு தடை கோரி வழக்கு ! இன்று உயர்நீதிமன்றம் விசாரணை
சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக பாஜக சார்பில் வேல்யாத்திரை நடைபெறுகிறது.நவம்பர் 6-ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கி டிசம்பர் 6-ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நிறைவடைகிறது.வேல் யாத்திரை நிகழ்ச்சியில் பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழகத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனை தடை செய்ய வேண்டும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் , பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற்றால் ,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவழக்கில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.