அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி முன் ஓபிஎஸ் முறையீடு செய்துள்ளார்.பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடப்பதாக நேற்று முன்தினம் மாலைதான் தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாகவும்,எனவே பொதுக்குழுவுக்கு தடை விதிக்க அவசர வழக்காக இதனை எடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று இன்று அதனை விசாரிப்பதாக தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்திருந்தார்.
இதனையடுத்து, அதிமுக பொதுக்குழு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேறு நிவாரணங்களைப் பெற உயர் நீதிமன்றத்தை அணுக தெரிவித்துள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியதற்கு, பொதுக்குழுவுக்கு தடை தான் கோரப்பட்டுள்ளது என்றும்,
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம்
விளக்கமளித்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இ.பி.எஸ். தரப்பு பதில்மனு தாக்கல் செய்யப்பட்டும், வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்தால் என்ன?என்றும் நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், பொதுக்குழு திங்கட்கிழமை நடைபெறவுள்ளதால் இன்றே விசாரிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆனால், உடனடியாக விசாரித்து உத்தரவிடுங்கள் என நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது என தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வலக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…