செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு நாளை ஒத்திவைப்பு!

SenthilBalaji SCourt Case

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைத்து.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மதியம் 2 மணிக்கு விசாரணை தொடங்கி நடைபெற்றது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தார். கபில் சிபில் வாதத்தில், அமலாக்கத்துறை காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அவர்களால் எப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பினார். நேரடியாக கைது செய்து விசாரணை நடத்த முடியுமா?, கஸ்டம்ஸ் அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியாது.

போலீசாரிடம் தான் ஒப்படைக்க முடியும் என்றும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார். இதுபோன்று, அமலாக்கத்துறை தரப்பிலும் வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த, மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை, நாளைக்கு (ஜூலை27) ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி தரப்பு தங்கள் வாதங்களை நாளை நிறைவு செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்