அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆளும் திமுகவினர் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசுவதை கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 370 பாஜகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.