“ஹெச்.ராஜாவுக்கு ஆப்பு”8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.அதற்காக தமிழகத்தில் பல இடங்களில் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அது மட்டுமில்லாமல் காவல்துறையினரும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தனர்.
இந்நிலையில் புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.
அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அவரின் இந்த பேச்சுக்கு எதிராக கண்டனம் வலுத்து வருகின்றது.
இந்நிலையில், திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.அவர்கள் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
DINASUVADU