பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, எஸ்.ஆர். சேகர் உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை போலீசார் வழக்குப்பதிவு.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கடந்ததினங்களுக்கு முன் தனது பணியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அண்ணாமலை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
அதன்பின் தமிழகம் வந்த அவருக்கு கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகம் முன்பு நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனையடுத்து, அண்ணாமலை, எஸ்.ஆர். சேகர் உட்பட ஐந்து பேர் மீது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்மீது ஊரடங்கு விதிமுறைகளை மீறுதல், நோய் பரவும் வகையில் செயல்பட்டது உட்பட 5 பிரிவுகளின் கீழ் காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
என்றும் ‘ராஜா’ ராஜா தான்! இந்தியவில் முதல் நபராக இசைஞானி செய்த மாபெரும் சிம்பொனி சாதனை!
March 9, 2025
பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!
March 8, 2025