ஓபிஎஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..!

கலைவாணர் அரங்கம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உட்பட 63 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து, இந்த மசோதாவை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் கலைவாணர் அரங்கம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்து போலீசார் வாகனத்தில் அழைத்து சென்று பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் உட்பட 63 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவினர் மீது ஒன்றாக கூடுதல், அரசாங்க உத்தரவை மதிக்காமல் இருத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.