பாலியல் வன்கொடுமை வழக்கு- சிபிசிஐடி இறுதிக்கட்ட விசாரணை
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் இறுதிக்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கைதான ஹரிஹரன், ஜுனைத் அகமத் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து 6 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களிடம் பெற்ற வாக்கு மூலங்களை ஆவணப்படுத்தும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காவலில் எடுக்கப்பட்ட ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகியோரிடம் 5-வது நாளாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸ் காவல் நாளை மாலை 5 மணியுடன் முடியும் நிலையில் இன்று இறுதி கட்ட விசாரணையை முடிக்க சிபிசிஐடி திட்டமிடப்பட்டுள்ளது. விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை நீதிமன்ற காவலுக்கு ஒப்படைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)