தேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்,தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் செப் 2-ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் எஸ்.வி.சேகரை கைது செய்வோம் என்றும் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை எஸ்.வி.சேகருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து வழக்கினை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…